

சிவகங்கை அருகே 750 ஆண்டு கள் பழமையான குலசேகர பாண்டியன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனரும் தொல்லியல் ஆர்வல ருமான புலவர் கா.காளிராசா, பொருளாளர் பிரபாகரன், அரச னேரி கீழமேடு சரவணன் ஆகியோர் சூரக்குளத்தில் நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில் சிதிலமடைந்த நான்கு கால் மண்டபத்தில் இருந்த கல் வெட்டை ஆய்வு செய்தனர்.
இது குறித்து புலவர் கா.காளி ராசா கூறியதாவது: இப்பகுதியில் உள்ள காட்டுக் கோயில்களை நாட்டரசன் கோட்டை மக்கள் வழிபடுகின்றனர். அக்காலத்தில் காட்டுக்கோயில்களுக்கு செல்வோர் இளைப்பாறும் இட மாகவும், தண்ணீர் அருந்தும் இடமாகவும் நான்கு கால் மண்டபம் இருந்திருக்கலாம். இந்த மண்டபத்தின் தெற்குப்பகுதியில் நான்கரை அடி நீளத்தில் ஒரு அடி அகலத்தில் 5 வரிகளைக் கொண்ட கல்வெட்டு உள்ளது.
குலசேகர பாண்டியனின் ஏழாம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கிபி 1268 முதல் 1311 வரை ஆட்சி செய்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் இக்கல்வெட்டு 1275-ம் ஆண்டு வெட்டப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது.
இக்கல்வெட்டில், ஸ்ரீகோமார பன்மரான திரிபுவனச் சக்கரவ ர்த்திகள் குலசேகர தேவர்க்கு ஏழாம் ஆண்டு முடிகொண்ட சோழபுரத்தில் உள்ள திருச்சி வணமுடைய நாயனார் கோயில் தானத்தார் எனும் அரசர்களால் நியமிக்கப்பட்ட கோயில் அலுவலர்கள் இவ்வூரைச் சேர்ந்த உய்யவந்தான் எட்டி உள்ளிட் டோருக்கு வழங்கப்பட்ட நிலத்தை அவர்கள் இறைவனுக்குத் தேவ தானமாக விட்டுக் கொடுத்ததாக எழுதப்பட்டுள்ளது. இது துண்டுக் கல்வெட்டாக உள்ளது.
மேலும், இக்கல்வெட்டு வேறு எங்கிருந்தோ எடுத்து வந்து நான்கு கால் மண்டபக் கட்டுமானப் பணிக்காகப் பயன்படுத்தி இருக்கலாம், என்றார்.