

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சேதமடைந்த மதகு சீரமைக்கும் பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
தா.பழூர் அருகேயுள்ள தென்கச்சி பெருமாள்நத்தம்-மேலக்குடிகாடு இடையே கொள்ளிடக்கரையில் உள்ள மதகு சேதமடைந்ததையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அதனை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் மோகன்ராஜ், பணிமேற்பார்வையாளர் சரவணன், ஊராட்சித் தலைவர் ஆனந்தவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.