நிலுவையில் உள்ள சலுகைகள் பெற விண்ணப்பிக்க ஏ.இ.பி.சி அழைப்பு :

நிலுவையில் உள்ள சலுகைகள் பெற விண்ணப்பிக்க ஏ.இ.பி.சி அழைப்பு :
Updated on
1 min read

மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் சலுகைகளில் நிலுவையில் உள்ள சலுகைகளைப் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக அகில இந்திய தலைவர் ஏ.சக்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் நிலுவையில் உள்ள சலுகைகளான எம்.இ.ஐ.எஸ்., ஆர்.ஓ.எஸ்.எல், ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல், பெறுவதற்கு விரைந்து விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரைக்கான நிலுவையில் உள்ள சலுகைகளை டிஜிஎப்டி வலைதளம் மூலமாகவும், ஜனவரி 2021 முதல் பெற வேண்டிய சலுகைகளை ஐசிஇஜிஏடிஇ வலைதளம் மூலமாகவும் பெறலாம். நிலுவைத் தொகை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதனை உடனடியாக ஏ.இ.பி.சி. கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். இந்திய சுங்கத்துறையின் வலைதளமான (ஐசிஇஜிஏடிஇ) விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in