வசதியானவர்களிடம் இலவச ரேஷன் அரிசி கார்டுகள் : வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வு

வசதியானவர்களிடம் இலவச ரேஷன் அரிசி கார்டுகள் :   வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வு
Updated on
1 min read

வசதி படைத்தவர்களிடம் அந்தியோதயா அன்னயோஜனா, அன்னபூர்ணா ரேஷன் கார்டுகள் இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து வழங்கல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் விதவைகள், நோயாளிகள், ஊனமுற்றோர், 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர், மலைவாழ் குடும்பங்கள், எய்ட்ஸ் நோயாளிகள், தொழு நோயாளி கள், வீடற்ற நகர்வாசிகளுக்கு மாதம்தோறும் 35 கிலோ இலவச ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது.

அதேபோல் அன்னபூர்ணா திட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட வருவாய் அல்லாத தனிநபருக்கு மாதம்தோறும் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இரு திட்டங்களிலும் வசதி படைத்த பலர், பயன் அடைந்து வருகின்றனர். இதையடுத்து இந்த இரு திட்டங்களிலும் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்களை வீடு, வீடாகச் சென்று வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சிவகங்கை வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2015-ம் ஆண்டு விவரங்கள் அடிப்படையில்தான் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளில் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், வசதியானவர்கள் ஏழைகளாகவும், வசதி இல்லாதவர்கள் வசதியானவர்களாகவும் மாறியிருக்கக்கூடும். அதனால் இரு திட்ட கார்டுகளையும் முழுமையாக ஆய்வு செய்ய உணவு வழங்கல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in