

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி தென்காசி, நெல்லை செல்லும் வழியில் நேற்று விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சென்றார். அப்போது அவரை வரவேற்ற அதிமுகவினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக முன்னாள் முதல்வர் பழனிசாமி மதுரையிலிருந்து விருதுநகர் மாவட்டம் வழியாக நேற்று சென்றார். அப்போது மாவட்ட எல்லையான ஆவல்சூரன் பட்டியில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அவருக்கு பரிவட்டம் கட்டி பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், முன்னாள் சாத்தூர் எம்எல்ஏக்கள் ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன், திருவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா, மாவட்ட ஊராட்சித் தலைவர் வசந்தி மான்ராஜ், துணைத்தலைவர் சுபாஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சாத்தூரில் மோதல்
பின்னர் கட்சியினரும், போலீஸாரும் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.