

கடந்த 1921-ம் ஆண்டு மதுரைக்கு ரயிலில் செல்லும் வழியில் மகாத்மா காந்தி திண்டுக்கல்லில் சுதந்திரப் போராட்ட உரையை நிகழ்த்தினார். அவர் திண்டுக்கல் வந்து 100 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது பயணத்தை நினைவுகூரும் விதமாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
காந்தியம் முன்னெடுப்போம் கூட்டுக் குழுவின் மாவட்ட அமைப்பாளர் துரைசேகர் முன்னிலை வகித்தார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் ஊர்வலமும் , மாலையில் கருத்தரங்கமும் நடந்தன.