முன்னாள் அமைச்சர் வீரமணி மீதான வழக்கில் - பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்கள் : வேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு :

முன்னாள் அமைச்சர் வீரமணி மீதான வழக்கில்  -  பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்கள்  : வேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு :
Updated on
1 min read

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.28 லட்சம் பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட வற்றை வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக 564 சதவீதம் சொத்துக்களை குவித்தி ருப்பதாக வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் வீரமணியின் வீடு, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்களின் வீடுகள் என 35 இடங்களில் கடந்த 16-ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் 623 (சுமார் 5 கிலோ) பவுன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 28 லட்சம் ரொக்கப் பணம், 7 கிலோ வெள்ளி, 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள், 3 செல்போன், லேப்டாப், கணினி ஹாட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்ததாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய சொத்து ஆவணங்கள், ஹாட் டிஸ்க்குகள், பென்டிரைவ்கள், வங்கி லாக்கர் சாவிகள், வங்கி பாஸ் புத்தகங்கள் மற்றும் ரூ.28 லட்சம் ரொக்கப் பணத்தை வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பானு முன்னி லையில் நேற்று ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங் கள், கணினி ஹாட் டிஸ்க்குகள், பென் டிரைவ்கள், வீரமணியின் ஆப்பிள் செல்போன் உள்ளிட்ட 3 செல்போன்கள், லாக்கர் சாவி கள், ரூ.28 லட்சம் ரொக்கம் எங்கள் வசம் இருந்தது. இவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்தோம்.

நகை மதிப்பீடு

தங்க நகைகள், வெள்ளி பொருட்களை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்து விட்டோம். வழக்குக்கு தேவைப்படும் நேரத்தில் அவற்றை கணக்கு காட்ட வேண்டும் என கூறி இருக் கிறோம்’’ என தெரிவித்தனர்.

தங்க நகைகள், வெள்ளி பொருட்களை கே.சி.வீரமணியிடம் திரும்ப ஒப்படைத்து விட்டோம். வழக்குக்கு தேவைப்படும் நேரத்தில் அவற்றை கணக்கு காட்ட வேண்டும் என கூறி இருக்கிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in