Regional03
ஆர்ப்பாட்டம் :
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த ஆலத்தியூர் தனியார் சிமென்ட் ஆலை முன்பு நேற்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலத்தியூர், ஆதனகுறிச்சி, மணக்குடையான், அயன்தத்தனூர், தளவாய் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மக்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சமூக ஆர்வலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
