

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள 9,383 அரசு அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக, 1,164 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தேர்தல் பணியில் ஈடுபட 9,383 அரசு அலுவலர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு வாக்குச்சாவடி வாரியாக பணி நியமனம் செய்வதற்கான கணினி குலுக்கல் நேற்று நடைபெற்றது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்வது இது தான் முதல் முறை என கூறப் படுகிறது. இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கணினி குலுக்கலை ஆட்சியர் அமர் குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஹரிஹரன், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், மாவட்ட தகவல் மைய அலுவலர் ரங்கநாதன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
பாடம் நடத்திய ஆட்சியர்
இதில், குரிசிலாப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது அங்கு பிளஸ் 1 மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் நடைபெற்றுக் கொண் டிருந்தன. ஒரு வகுப்பறைக்குச் சென்ற ஆட்சியர் அமர் குஷ்வாஹா தன்னை அறிமுகம் செய்து கொண்டதுடன், மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணத்தில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் சொற்சொடர் பயன்பாடு குறித்த வகுப்பை எடுத்தார்.