தி.மலை அருணை பொறியியல் கல்லூரியில் பயிற்சி முகாம் :

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில்  ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
Updated on
1 min read

இந்திய தொழில் கல்வி சம்மேளனம் சார்பில் ஆசிரியர் பணி நெறிமுறைகளும், அதன் நடைமுறைகளும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை தி.மலை அருணை பொறியியல் கல்லூரி யில் நேற்று நடைபெற்றது.

கல்லூரி பதிவாளர் முனைவர் சத்தியசீலன் தலைமை வகித்தார். கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் முன்னிலை வகித்தார். முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

சென்னை ஸ்டார்ட்அப் சொலுஷன் நிறுவனர் முனைவர் ரோஸி பெர்னாண்டோ பேசும் போது, "ஒரு தகவலை தெளிவாக தெரிவித்து முடித்ததும், அதில் சொல்லப்பட்டவற்றின் முழு அர்த்தத்தையும் மாணவர்கள் புரிந்து கொள்ளப்பட்டதை உணர வைக்க வேண்டும். இந்திய தொழிற்கல்வி ஆசிரியர் பணியானது, மேலை நாடுகளுக்கு இணையானது" என்றார்.

முனைவர் கீதா பிரேம்குமார் பேசும்போது, "தகவல் தொடர்புகளை புரிந்து கொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும் மாணவர்களிடம் ஆங்கில மொழி திறனை வளர்ப்பது முக்கியம்" என்றார்.

இதில், கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஆட்டோ மொபைல் துறைத் தலைவர் பேராசிரியர் ஏகாம்பரம் நன்றி கூறினார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in