

பிரதமர் மோடியின் 71-வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்டம் தளவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் பிரதமர் மோடியை வாழ்த்தி பாஜக சார்பில் பதாகை வைக்கப்பட்டிருந்தது.
இந்த பதாகையில் பிரதமரின் படம் நேற்று சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதைக் கண்டித்தும், பதாகையை சேதப்படுத் தியவரை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் பாஜக மாவட்டத் தலைவர் கே.சிவசாமி தலைமையில் தளவாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பாஜகவினர் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் நகுலன், மோகன், தொழில் பிரிவுத் தலைவர் ஆர்.வி.எஸ்.செல்வராஜ், இளைஞரணி தலைவர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வேலாயுதம்பாளையம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பாஜவி னர் மறியலை கைவிட்டனர்.