

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கல்வி நிலையங்களின் 7 இடங்களில் அமைந்துள்ள விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அனுக்ஞை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. யாகபூஜைகளை புலிவலம் ஜெ.சுந்தரம் சுவாமிகள் குழுவினர் நடத்தினர். நேற்று காலை கோயில்களின் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன், பொதுச்செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.