பழங்கரை ஊராட்சியை இணைத்து - அவிநாசியை நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை :

பழங்கரை ஊராட்சியை இணைத்து -  அவிநாசியை நகராட்சியாக  தரம் உயர்த்த கோரிக்கை :
Updated on
1 min read

அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அலுவலகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில், திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாக அறிவித்ததை வரவேற்கிறோம், அதேபோல பழங்கரை ஊராட்சிபகுதி என்பது அவிநாசி பேரூராட்சிக்கு மிக அருகில் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினசரி அவிநாசி வந்து செல்பவர்கள். பழங்கரை ஊராட்சியை அவிநாசி பேரூராட்சியுடன் இணைத்து அவிநாசியை நகராட்சியாக தரம் உயர்த்தி செயல்பாட்டுக்கு கொண்டுவர தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இசாக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுப்ரமணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி ராயப்பன், விடுதலை சிறுத்தைகள் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in