ஒரு முறை திட்டத்தின் கீழ் - அரிசி அரவை செய்திட தனியார் அரிசி ஆலைகள் விண்ணப்பிக்கலாம் :

ஒரு முறை திட்டத்தின் கீழ் -  அரிசி அரவை செய்திட தனியார் அரிசி ஆலைகள் விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஒருமுறை திட்டத்தின் கீழ் அரிசி அரவை செய்திட தனியார் புழுங்கல் அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தரமான அரிசி வழங்கிடும் பொருட்டு, நடப்பு கொள்முதல் பருவம் 2020-2021-ம் ஆண்டிற்கான கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவர்களாக செயல்பட்டு வரும் தனியார் அரவை ஆலை மூலம் அரவை செய்து தரமான அரிசியை பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கி வருகிறது.

மேலும், மண்டலங்களில் கூடுத லாக இருப்பில் உள்ள நெல்லினை கழகத்தில் இணையாத தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலைகள் மூலம் கழக நிபந்தனைகளுக்கு உட்பட்டு “ஒரு முறை திட்டத் தின் கீழ்” 15.09.2021 முதல் 15.11.2021 வரை அரவை செய்துஅரிசியை கிடங்கில் ஒப்படைக்க ஏதுவாக தனியார் புழுங்கல் அரிசிஅரவை ஆலை உரிமையா ளர்களிடமிருந்து 03.09.2021 முதல் விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகிறது.

இத்திட்டத்தில் இணைய விரும்பும் அரிசி ஆலை உரிமை யாளர்கள் தரமான அரிசியை அரவை செய்து வழங்க ஏதுவாக தங்கள் அரிசி ஆலைகளில், கலர் சார்ட்டர் உள்ளிட்ட நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். கூடுதல்விவரங்களுக்கு “மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம், விழுப்புரம்” என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அரிசி ஆலைகளில், கலர் சார்ட்டர் உள்ளிட்ட நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in