

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம் பாட்டுக் கழகம் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
அதிகபட்சம் ரூ.1லட்சம் வரை வங்கிக்கடனும், அதற்கு 50 சதவீத அரசு மானியமும் வழங் கப்படுகிறது. தகுதியுடைய விவசாயிகள் உரிய சான்றி தழ்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.