

திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘ஆசிரியர்களுடன் தேநீர்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் இலக்கியக்களம் துணைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் சுப்பையா வர வேற்றார். துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் இலக்கியக் களம் பொருளாளர் மணிவண்ணன், ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில் குமரன், ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
இலக்கியக் களம் நிர்வாகி முத்துலட்சுமி நன்றி கூறினார்.