ஆசிரியர் தினத்தை முன்னிட்டு - கடலூரில் ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல் :

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு -  கடலூரில் ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல் :
Updated on
1 min read

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 'இளந்தளிர் கடலூர்' என்ற அமைப்பு மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மரக்கன்று நடும் விழாநடைபெற்றது. ஆட்சியர் பாலசுப்ரமணியம் மரக்கன்று நட்டு ஆசிரியர்க ளுக்கு மரக்கன்றுளை வழங்கினார். இதைத்தொடர்ந்து 1,000 மரக்கன்று களை கடலூர் நகராட்சி பள்ளி, வாண்டி யாம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆண்டார்முள்ளிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) டெய்சிகுமார், கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in