

பத்ம விருதுகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசு பத்ம விருதுகளை வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வரும் 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவரம் அறிய www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதே இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 15-ம் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு அனுப்பி வைக்கவேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.