

நெல் அரவை செய்ய தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரியமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன, என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.
இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தரமான அரிசியை பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கி வருகிறது. இதன்படி நெல் கொள்முதல் மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லினை வரும் 15-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை அரவை செய்து ஒப்படைக்க தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது.
இதில் இணைய விரும்பும் அரிசி ஆலை உரிமையாளர்கள், தரமான அரிசியை அரவை செய்து வழங்க ஏதுவாக தங்கள் அரிசி ஆலைகளில் கலர் சார்ட்டர் உள்ளிட்ட நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் விவரம் அறிய மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் என்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.