Published : 29 Aug 2021 03:13 AM
Last Updated : 29 Aug 2021 03:13 AM

சாத்தனூர் அணையில் இருந்து நேரடி பாசனத்திற்காக - பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்கவும் : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம் ஆட்சியர் அலுவல கத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் டி.மோகன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் பேசியது:

தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து ஏரிகளிலும் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் மதகு, கலிங்கலை சீர்செய்ய வேண்டும். சீமை கருவேல மரங்களையும் முழுவதுமாக அகற்ற வேண்டும். அனைத்து வட்டாரங்களிலும் விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் முதல்போக சம்பா சாகுபடிக்காக தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசனம் பெறும். அதுமட்டுமின்றி 6 அணைக்கட்டுகளுக்கும் தண்ணீர் வந்து சேரும். எனவே சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் நேரடி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும். மலட்டாறு சீரமைப்புதிட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் டிராக்டர் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது, அதை களைய வேண் டும். பதிவு செய்த உடனேயே குறைந்த வாடகையில் டிராக்டர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நந்தன் கால்வாய் திட்டப்பணிகளை சிறப்பான முறையிலும், விரைந்தும் முடிக்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்து ஆட்சியர் மோகன் பேசியது:

தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.25 கோடியாக இருந்தது. அவற்றில் ரூ.13.50கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.11.63 கோடி நிலுவையில் உள்ளது.

அந்த தொகையை செப்டம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் வழங்கு வதாக ஆலை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். அதற்கான நடவடிக் கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கும். மானாவரி மணிலா, கம்பு பயிர்களுக்கு காப்பீடு செய்ய வரும் 31ம் தேதியும், மரவள்ளி, வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்ய செப்டம்பர் 15-ம் தேதியும் கடைசி நாளாகும்.

மேலும் மாவட்டத்தில் விவ சாயத்திற்கு தேவையான அளவுஉரம் இருப்பில் உள்ளது. மாவட்டத்தில் 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக் கப்பட்டன.

இதில் நெல்வரத்து இல்லாத 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஏரிகளில் மதகு, கலிங்கலை சீரமைக்க பொதுப்பணித்துறை மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.

6 அணைக்கட்டுகளுக்கும் தண்ணீர் வந்து சேரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x