

நாகை மாவட்டம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலை யத்தில் ஆட்சியர் அருண் தம்பு ராஜ் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இதில், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் செயல் பாடு மற்றும் அங்குள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், விஞ் ஞானிகள், தொழில்நுட்ப அலுவ லர்களின் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், நிலையத்தில் அமைக் கப்பட்டுள்ள கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பு பண்ணை, காளான் வளர்ப்புக் கூடங்கள், ஆடு இனப்பெருக்க மையம், அசோலா, மண்புழு உரம் மற்றும் அலங்கார மீன்குஞ்சு உற்பத்தி, தீவனப் பயிர் சாகுபடி மற்றும் பல்வேறு செயல்விளக்கக் கூடங்கள் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.கோபாலக் கண்ணன், மீன்வள விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் யு.ஹினோ பெர்னாண்டோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.