

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,620 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையை பொறுத்து, காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுப்பதும், தண்ணீர் வரத்து குறைவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 10,301 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 11,620 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 550 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதனிடையே, நேற்று முன்தினம் 65.77 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 66.08 அடியானது. நீர் இருப்பு 29.42 டிஎம்சி-யாக உள்ளது.