ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி - மகளிர் குழுவினர் ஆர்ப்பாட்டம் :

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மகளிர் குழு பெண்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மகளிர் குழு பெண்கள்.
Updated on
1 min read

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி கிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடியை சுற்றியுள்ள பண்டாரம்பட்டி, அய்யனடைப்பு, வடக்கு சங்கரபேரி, தெற்கு சங்கரபேரி, வடக்கு சிலுக்கன்பட்டி, குறிஞ்சி நகர், காமராஜ் நகர், சிவந்தகுளம், 3 சென்ட் அந்தோணியார்புரம், கால்டுவெல் காலனி, ராஜாவின் கோவில், முத்தையாபுரம், சில்லாநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் 120 மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் தங்களது வீடுகள் முன்பாகவும், மகளிர் குழு கூட்டம் நடைபெறும் பொது இடங்களுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான வாசகங்கள் மற்றும் ஆலையை திறக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் வைத்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in