மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஆந்திரா இளைஞர் உறவினரிடம் ஒப்படைப்பு :

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மனநலம் பாதிக்கப்பட்டு குண மடைந்த புள்ளராவை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த டீன் ரேவதி.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மனநலம் பாதிக்கப்பட்டு குண மடைந்த புள்ளராவை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த டீன் ரேவதி.
Updated on
1 min read

சிவகங்கை அருகே கடை வீதியில் சுற்றித்திரிந்த மன நலம் பாதித்த ஆந்திரா இளைஞரை மீட்டு, குணப் படுத்தி உறவினர்களிடம் மருத் துவர்கள் ஒப்படைத்தனர்.

சிவகங்கை அருகே சாத் தரசன்கோட்டை கடை வீதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட 34 வயது இளைஞர் சுற்றித் திரிந்தார். அவரை சமூக ஆர்வலர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி உதவியுடன் பேனியன் அமைப்பு சார்பில் செயல்படும் மனநலம் பாதித்தோர் மீட்பு மையத்தில் மார்ச் 27-ம் தேதி சேர்த்தனர். ஆறு மாதங்களாக சிகிச்சையில் இருந்த அவர், அண்மையில் குணமடைந்தார். அவர் தனது பெயர் புள்ள ராவ் என்றும், தனது ஊர் ஆந்திராவில் உள்ளது என்றும் தெரிவித்தார். இதையடுத்து ஆந்திரா போலீஸார் மூலம் புள்ள ராவ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று சிவகங்கை வந்த புள் ளராவ் சகோதரர் சஜ்வீவ்ராவ், புள்ளராவை ஊருக்கு அழை த்துச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in