திருவாரூர் மாவட்டத்தில் - நடமாடும் கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம் :

திருவாரூர் மாவட்டத்தில்  -  நடமாடும் கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம் :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நட மாடும் கரோனா தடுப்பூசி முகாமை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் நேற்று கொடி யசைத்து தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையா மங்கலம் பாலு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏ.கே.எஸ்.விஜயன் பேசியபோது, “அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக கரோனா தடுப்பூசியை அனை வரும் போட்டு வருகின்றனர். தற்போது, பொதுமக்களின் இருப்பிடத்துக்கேச் சென்று தடுப்பூசி போடும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களிலும் 30 நடமாடும் மருத்துவக்குழு மூலம் கரோனா தடுப்பூசி செலுத் தப்பட உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in