பனைப்பொருள் பதப்படுத்தும் தொழிலுக்கு - ரூ.10 லட்சம் வரை நிதியுதவி :

பனைப்பொருள் பதப்படுத்தும் தொழிலுக்கு  -  ரூ.10 லட்சம் வரை நிதியுதவி :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: பாரத பிரதமர் 2020 - 2021 ஆம் ஆண்டில் அறிவித்த 'ஆத்மநிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் 'பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறுநிறுவனங்களுக்கான திட்டம்' அறிவிக்கப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழுஅடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகளுக்கு நிதி உதவிவழங்கப்படும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவிகுழுக்கள் மற்றும் கூட்டுறவுநிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதிஉதவி வழங்கப்படும்.

‘ஒரு மாவட்டத்துக்கு ஒருவிளைபொருள்' என்ற அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக பனை பொருட்கள் பதப்படுத்தும் தொழில் செய்யவுள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, தகுதியான திட்டமதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி வழங்க வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே பனைபொருட்கள் மற்றும் பிற வேளாண்மை தொடர்பான தொழில் செய்யும் நிறுவனங்களோ, தனிநபரோ இத்திட்டத்தில் பங்கேற்கலாம். வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதிஉதவி வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in