Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM

தியாகராய நகரில் உரிமம் இன்றி வைத்திருந்த - 150 டம்மி துப்பாக்கிகள் பறிமுதல் :

சென்னை தியாகராய நகரில் உரிமம் இல்லாமல் டம்மி துப்பாக்கி வைத்திருந்தவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரது வீட்டிலிருந்து 150 டம்மி துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சினிமா படப்பிடிப்புக்காக கொண்டுசெல்லப்பட்ட இரு ஏ.கே.47 ரக டம்மி துப்பாக்கிகளை வாகன சோதனையின்போது போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை மாம்பலம் வைத்தியராமன் தெருவில் உள்ள ஒரு வீட்டில், டம்மி துப்பாக்கிகளை வாடகைக்குப் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார், சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 150 டம்மி துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், போலீஸார் நடத்திய விசாரணையில், வீட்டின் உரிமையாளரான செல்வராஜ், கடந்த சில ஆண்டுகளாக பிரபலமான பெயர் ஒன்றில் நிறுவனம் நடத்தி வருவதும், அதன் மூலம்சினிமா படங்களின் பயன்பாட்டுக்கு முறையான உரிமம் பெறாமல் டம்மி துப்பாக்கிகளை வாடகைக்கு விட்டுவருவதும் தெரியவந்தது.

இதையடுத்து 150 டம்மி துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்த போலீஸார், படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுள்ள செல்வராஜை விசாரணைக்கு ஆஜராகுமாறு, சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.

மேலும், முறையான உரிமம் இல்லாமல் டம்மி துப்பாக்கிகளை வைத்து தொழில் செய்து வந்தது தொடர்பாக செல்வராஜ் மீது, ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகசினிமா படங்களின் பயன்பாட்டுக்கு முறையான உரிமம் பெறாமல் டம்மி துப்பாக்கிகளை வாடகைக்கு விட்டுவருவதும் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x