

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு திமுக சார்பில் அரசின் 100 நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி நகர திமுக சார்பில் நடந்த நிகழ்விற்கு நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார்.
இதில், மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் கலந்து கொண்டு இனிப்புகளும், சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
இதேபோல் காவேரிப்பட் டணத்தில் நகரச் செயலாளர் ஜே.கே.எஸ்.பாபு தலைமை வகித்தார். இதில் திமுக பிரமுகரும், தொழிலதிபருமான கே.வி.எஸ்.சீனிவாசன் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார். ஓசூரில் மாநகர திமுக பொறுப்பாளர் சத்யா தலைமையில் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இலவச பெட்ரோல்