ஆரணி மற்றும் வேலூர் அரசு மருத்துவமனையில் - பிரேத பரிசோதனைக்கு பிறகு : 7 பேரின் உடல்கள் ஒப்படைப்பு : தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் கைது

ஆரணி மற்றும் வேலூர் அரசு மருத்துவமனையில் -  பிரேத பரிசோதனைக்கு பிறகு : 7 பேரின் உடல்கள் ஒப்படைப்பு  :  தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் கைது
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே நடைபெற்ற கோர விபத்தில் உயிரிழந்த 7 பேரது உடல்களும் பிரேதப்பரிசோதனைக்கு பிறகு உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தி.மலை மாவட்டம் சந்தவாசல் அருகே முனிவந்தாங்கல் கிராமம் கூட்டுச்சாலையில் லாரி மீது கார் மோதி நேற்று முன் தினம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதியில் வசிக்கும் மூர்த்தி, அவரது மனைவி கலா, அவர்களது பேத்தி நிஷா (3 மாதம்) மற்றும் 3 பெண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழப்பு 7-ஆக உயர்வு

இதற்கிடையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சசிக் குமார், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் மூர்த்தியின் மூன்றரை வயது பேரன் குமரன் காயமின்றி உயிர் பிழைத்துள்ளான்.

நெஞ்சை உலுக்கியது

காவல் துறையினர் விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in