

தூத்துக்குடி தூய பனிமய மாதாபேராலய 439-வது பெருவிழாகடந்த ஜூலை 26-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பேராலயத்துக்குள் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
10-ம் நாள் திருவிழாவான இன்று (ஆகஸ்ட் 4) மாலை 7 மணியளவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகைதலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. பெருவிழா தினமான நாளை காலை 7.30 மணிக்கு ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து நிகழ்வுகளும் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. திருவிழாவை முன்னிட்டு பேராலயம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
வழக்கமாக 10-ம் நாள் திருவிழாவன்று இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திலும், 11-ம் நாள் திருவிழாவன்று மாலை 7 மணிக்கு நகர வீதிகளிலும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறும். கரோனா ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக சப்பர பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.