

சீர்மரபினர் நலச் சங்கம் சார்பில், தேனி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இப்போராட்டத்துக்கு சீர்மர பினர் நலச்சங்க மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைச் செய லாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் குறிப்பிட்ட சமுதாயத் தினருக்கு அதிமுக அரசு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங் கியது. திமுக அரசு இதற்கு ஆணை வெளியிட்டுள்ளது எனக் கண்டனம் தெரிவித்தனர்.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் எங்களை கைவிட்டு விட்டதாகக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்த முயன்றனர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.