

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.நேரு தலைமை வகித்தார். துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் வி.அருணாச்சலம், மகளிர் மருத்துவத் துறைத் தலைவர் முத்துபிரபா ஆகியோர் பங்கேற்று, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினர். மருத்துவ மாணவியர் மற்றும் செவிலியர் மாணவியர் விழிப்புணர்வு ரங்கோலி வரைந்திருந்தனர். குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பிரத்யேக படுக்கைகள் அமைக்கும் பணிகளை டீன் ஆய்வு செய்தார்.