சிவகங்கை அரசு மருத்துவமனையில் - 276 தற்காலிக பணியிடங்களுக்கு 5,000 பேர் விண்ணப்பிப்பு : அமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரை கடிதங்களும் குவிந்தன

சிவகங்கை அரசு மருத்துவமனையில் -  276 தற்காலிக பணியிடங்களுக்கு 5,000 பேர் விண்ணப்பிப்பு :  அமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரை கடிதங்களும் குவிந்தன
Updated on
1 min read

சிவகங்கை அரசு மருத்துவமனையில் 276 தற்காலிகப் பணியிடங் களுக்கு 5,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணியிடங்களுக்கு அமைச்சர், எம்எல்ஏக்கள்அளித்தப் பரிந்துரைக் கடிதங்களும் குவிந்துள்ளன.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா முதல் அலை, இரண் டாவது அலையின்போது தடுப்புப் பணிக்காக தனியார் மூலம் (அவுட்சோர்சிங்) பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது தேசிய சுகாதாரத் திட்டத்தில் நேரடியாக 6 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 75 செவிலியர்கள், 10 ஆய்வக நுட்புநர்கள், 81 பல்நோக்குப் பணியாளர்கள், 10 நுண் கதிர் வீச்சாளர்கள், 15 டயாலிசிஸ் டெக்னீஷியன்கள், 25 இசிஜி டெக்னீஷியன்கள், 10 சிடி ஸ்கேன் டெக்னீஷியன்கள், 30 அனஸ்தீஸியா டெக்னீஷியன்கள், 20 மருந்தாளுநர்கள் என 276 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு ஜூலை 31 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித் துள்ளனர். ஏற்கெனவே கரோனா சமயத்தில் தனியார் மூலம் நியமிக்கப்பட்டு பணி நீக்கம் செய் யப்பட்ட ஊழியர்கள், தங்களுக்குப் பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை மீண்டும் பணியமர்த்தினால் 50 பணியிடங்கள்கூட மிஞ்சாது. ஆனால், இப்பணியிடங்களுக்கு அமைச்சர், எம்எல்ஏக்களின் பரிந்துரைக் கடிதங்கள் குவிந்துள்ளன. அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலர் இப்பணியிடங்களுக்குப் பணமும் வசூலித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், இப்பணியிடங்களை நிரப்புவதில் மருத்துவமனை நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘ஏற்கெனவே கரோனா காலத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை தரப்படும். மற்ற பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும்,’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in