Regional03
கூடங்குளம் அருகே இளைஞர் கொலை : தந்தை, சகோதரர் உட்பட 3 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே ஆற்றங்கரை பள்ளிவாசல் நம்பியாற்றில் நேற்று முன்தினம் காலையில் ரத்தம் தோய்ந்த நிலையில் சாக்கு மூட்டை கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்ட போது சாக்கு மூட்டையில் இளைஞர் உடல் இருந்தது தெரியவந்தது. அதை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட இளைஞர் பணகுடி அருகே உள்ள அழகிய நம்பிபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் அஜித் (21) என்பது தெரியவந்தது. சுப்பையா வின் இரண்டாவது மனைவியின் பிள்ளையான அஜித், சொத்து பிரச்சினையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுப்பையா மற்றும் அவரது முதல் மனைவியின் மகன் இசக்கிமுத்து, தண்டையார்குளத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி ஆகியோரை கைது செய்தனர்.
