திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் - மருந்தாளுநர் உள்ளிட்ட 42 பணியிடங்களை : தற்காலிகமாக நிரப்ப நேர்காணல் : ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்குகிறது

திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் -  மருந்தாளுநர் உள்ளிட்ட 42 பணியிடங்களை : தற்காலிகமாக நிரப்ப நேர்காணல் :  ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்குகிறது
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள அரசு மருத் துவமனைகளில் மருந்தாளுநர் உள்ளிட்ட 3 பதவிகளுக்கான 42 பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான நேர்காணல் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பு பணிக்கு மருந்தாளுநர், ஆய்வுக் கூட நுட்புநர் மற்றும் நுண் கதிர் வீச்சாளர் ஆகியோர் தற்காலிகமாக நியமிக்கப்படவுள்ளனர். 6 மாதங்களுக்கு தொகுப்பூதியதில் பணியாற்ற, இரண்டாண்டு பட்டய படிப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிலையங்களில் பட்டய படிப்பு படித்திருக்க வேண்டும். மருந்தாளுநர், ஆய்வுக் கூட நுட்புநர், நுண்கதிர் வீச்சாளர் பணிக்கு தலா 14 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மாத ஒப்பந்த ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். மருந் தாளுநர் பணிக்கு ஆகஸ்ட் 3-ம் தேதியும், நுண் கதிர் வீச்சாளர் பணிக்கு ஆகஸ்ட் 4-ம் தேதியும், ஆய்வுக் கூட நுட்புநர் பணிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி நேர்காணல் நடை பெறவுள்ளது.

திருவண்ணாமலை நகரம் தண்டராம்பட்டு சாலையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க விருப்பம் உள்ள வர்கள், அசல் கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்” என கேட்டுக்கொண் டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in