Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM

விழுப்புரம் அதிமதுரம் ஹோட்டல் சார்பில் - அறுசுவை உணவு சமையல் போட்டி :

விழுப்புரம்

விழுப்புரத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள விழுப்புரம் அதிமதுரம் ஹோட்டல் சார்பில் அறுசுவை உணவு சமையல் போட்டி நடைபெறுகிறது.

அறுசுவை உணவு நம்முடைய தனிச்சிறப்புகளில் ஒன்று. அறுசுவை உணவின் உன்னதத்தை உணர்ந்த நம் முன்னோர், அதன் மூலம் நலமாக, வளமாக வாழ்ந்துள்ளனர். அத்தகைய உணவின் மகத்துவத்தை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

இந்த நோக்கத்திற்காக செயல்முறை இல்லாமல் கருத்துக்கள் மட்டும் எழுத்து மூலமாக பதிவு செய்து தெரிவிக்கும் வகையில் ஒரு கருத்தியல் சமையல் போட்டி நடைபெறுகிறது.

ஆர்வம், விருப்பம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். கட்டணம் இல்லை.

இதில் வெற்றி பெறுவோருக்கு, ‘நலம் சித்த மருத்துவ சாலை, கெடிலம்,வழங்கும் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். இதுதவிர ஆறுதல் பரிசுகளும் உண்டு. வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் தலைப்புகளுக்குரிய பதிலை எழுத்துப் பூர்வமாக நேரில் வந்து கொடுக்க வேண்டும்.

இதுதொடர்பான அனைத்து தொடர்பு களுக்கும், விரைவில் தொடங்கப்பட இருக்கிற ‘ஹோட்டல் அதிமதுரம் - சைவம் 12-A சேர்மன் சிதம்பரம் தெரு, மேற்குசண்முகபுரம் காலனி, விழுப்புரம் (சிக்னல்அருகில், ஐசிஐசிஐ பேங்க் பின்புறம், கேவிஆர் கெஸ்ட் ஹவுஸ் அருகில் )’ என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இதுதொடர்பாக கூடுதல் தகவல் அறிய 94884 71981, 94421 09809, 98436 30907,94877 92504 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x