ஏலகிரி மலையில் - ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு :

ஏலகிரி மலையில் -  ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு  :
Updated on
1 min read

ஏலகிரி மலையில் கல்லூரி பேராசிரியருக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய் துள்ளனர்.

திருப்பத்தூர் சக்தி நகரைச் சேர்ந்தவர் ஜோசப் (68). இவர், தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி மனோகரி பெயரில் கடந்த 1992-ம் ஆண்டு ஏலகிரி மலை கொட்டையூர் கிராமத்தில் 75 சென்ட் நிலம் வாங்கினார். அவ்வப்போது சென்று நிலத்தை பார்வையிட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஏலகிரி மலைக்கு அவரால் செல்ல முடியவில்லை. இதற்கிடையே, ஜோசப் மகன் கருண் அசோக் என்பவர் ஏலகிரி மலைக்கு சென்று தங்களது நிலத்தை பார்வையிட்டபோது அங்கு முள்வேலி அமைத்து, அதேபகுதியைச் சேர்ந்தராமன் அவரது தந்தை கோவிந்த சாமி உறவினர்கள் செல்வம், காளி, குட்டி ஆகியோர் 75 சென்ட் நிலத்தை அபகரித்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராமனிடம் கேட்ட போது, அவர் அந்த நிலத்துக்கான பத்திரத்தை காட்டி 75 சென்ட் நிலம் தங்களுடையது எனக்கூறி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜோசப் மற்றும் அவரது மனைவி மனோகரி ஆகியோர் புகார் செய்தனர்.

இந்த புகார் மீது நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, ராமன், கோவிந்தசாமி மற்றும் அவர்களது உறவினர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து ஜோசப் குடும்பத்தாருக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான 75 சென்ட் நிலத்தை அபகரித்துள்ளது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, ராமன், கோவிந்தசாமி, செல்வம் உட்பட 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in