சிறுபூலுவபட்டி - குமார் நகர் வரை பேருந்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தல் :

சிறுபூலுவபட்டி - குமார் நகர் வரை பேருந்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தல் :
Updated on
1 min read

திருப்பூர் சிறுபூலுவபட்டியிலிருந்து - குமார் நகர் வரை பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் நாகராஜ் தலைமையிலான அக்கட்சியினர், போக்குவரத்து கழக திருப்பூர் கிளை மேலாளர் ஆறுமுகத்திடம் அளித்த மனுவில், "சாமுண்டிபுரம், வளையன்காடு, சிறுபூலுவப்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுப் போக்குவரத்தான பேருந்து வசதி இல்லாமல் பனியன் நிறுவனத் தொழிலாளர்கள், வயதானவர்கள், பெண்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். குமார் நகர் வரை நடந்து சென்று கோவை, ஈரோடு உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி பேருந்து வசதி ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கிளை மேலாளர் ஆறுமுகம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in