சாலையோர வியாபாரிகளுக்கு ஸ்டேட் வங்கி சார்பில் கடனுதவி :

சாலையோர வியாபாரிகளுக்கு ஸ்டேட் வங்கி சார்பில் கடனுதவி :

Published on

ஸ்டேட் வங்கி சார்பில் சாலை யோர வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டம் திருவாரூரில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் ஸ்டேட் வங்கியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சி யில், 200 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.20 லட்சம் கடனுதவி வழங்கும் திட்டத்தை ஸ்டேட் வங்கியின் சென்னை பொதுமேலாளர் அமித்வர்மா தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில், அவர் பேசிய போது, “கரோனா பேரிடர் காரணமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் முயற்சியாகத்தான் இதுபோன்ற கடனுதவி திட்டங்கள் ஸ்டேட் வங்கி சார்பில் வழங் கப்பட்டு வருகின்றன” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in