

தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மஷார் கிராமத்தில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது திடீரென மண் சரிந்து விழுந்ததில், கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தென்னகரகத்தை சேர்ந்த ராமசாமி(53) என்பவர் மண்ணில் புதைந்து உயிரிழந்தார்.
இது குறித்து கடலாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.