Regional03
பாமக 33- ம் ஆண்டு தொடக்கவிழா: இனிப்பு வழங்கி கொண்டாட்டம் :
பாமகவின் 33-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு விழுப்புரம் பாமக அலுவலகத்தில் மாநில துணைப்பொதுச் செயலாளர் தங்கஜோதி தலைமையில் கொடியேற்றி,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிகொண்டாடினர். வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அன்புமணி, மாநில இளைஞரணி துணைத்தலைவர் மணிமாறன், நகர செயலாளர் பெருமாள்மற்றும் நிர்வாகிகள் தேசிங்குரா ஜன், மணிகண்டன், வேலு, குப்பு சாமி, விஜயன், துரை சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதே போல முண்டியம்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் பாமகவினர் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
