Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

உலமாக்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனம் :

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் மானியத்தில் இருசக்கர வாகனங்கள் பெற விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி யாற்றிருக்க வேண்டும். தமிழகத்தை சார்ந்தவராகவும், 18- 40 வயதுக் குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும்போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு (தேர்ச்சி, தோல்வி). மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் ரூ.25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து வரும் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x