அறந்தாங்கி அருகே - மறமடக்கியில் குறுங்காடு அமைக்கும் பணி : அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கியில் குறுங்காடு அமைப்பதற்காக நேற்று மரக்கன்று நடுகிறார் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கியில் குறுங்காடு அமைப்பதற்காக நேற்று மரக்கன்று நடுகிறார் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே தனது சொந்த ஊரான மறமடக்கியில் குறுங்காடு அமைக்கும் பணியை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.

மறமடக்கியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் முகக்குளத்தில் அடர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் கடந்த ஒரு வாரமாக அகற்றப் பட்டன.

பின்னர், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் குறுங்காடு அமைப் பதற்காக சுமார் 5 ஆயிரம் மரக் கன்றுகள் நேற்று நடப்பட்டன. இதை, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து தான் செல்லும் இடங்களில் மரக்கன்று களை நடுவதில் ஆர்வம் காட்டி வரும் இவர், மற்ற ஊர்களுக்கு முன் மாதிரியாக திகழ்வதற்காக தனது ஊரில் உள்ள குளத்தில் குறுங்காடு அமைப்பதை தொடங்கி வைத்துள்ளார்.

இக்கன்றுகளை தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்க அறிவுறுத் தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் தென்னை வணிக வளாகத்தில் அரைவை கொப்பரையை கிலோ ரூ.103.35 வீதம் கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வரு வாய் அலுவலர் பெ.வே.சரவணன், வேளாண் வணிக துணை இயக்குநர் சங்கரலட்சுமி, விற்ப னைக்குழு மேலாளர் மல்லிகா, கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறமடக்கியில் 4 ஏக்கர் பரப்பளவில் முகக்குளத்தில் அடர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் கடந்த ஒரு வாரமாக அகற்றப்பட்டன

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in