பெரியார் பல்கலைக்கழக முறைகேடு விசாரணை குழுவிடம் விவரம் தரத் தயார் : பல்கலைக் கழக பாதுகாப்பு குழு தகவல்

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு விசாரணை குழுவிடம் விவரம் தரத் தயார் :  பல்கலைக் கழக பாதுகாப்பு குழு தகவல்
Updated on
1 min read

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்திட அரசு அமைத்துள்ள குழுவிடம், உரிய விவரங்கள், ஆவணங்களை வழங்க தயாராக உள்ளதாக, சேலம் பெரியார் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவின் சார்பில் பல்கலைக்கழக அனைத்து பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி பல்வேறு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது, புதிதாக அமைந்துள்ள அரசு பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழக உயர் கல்வித்துறை, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளான பதவி நியமனங்கள், பதவி உயர்வு, ஒப்பந்தப் புள்ளிகள், நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க முதல்வர் உத்தரவுப்படி விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனை பெரியார் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு வரவேற்கிறது.

இந்த குழு விசாரணையின் போது, பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முறைகேடுகள் குறித்த விவரங்களையும், ஆவணங்களையும் தரத் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in