தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் :

தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கூறியுள்ளதாவது:

விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு, மின்மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கு, சமூகநலத் துறையின் மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எனவே, தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பத்துடன், வருமானச்சான்று (ரூ.72 ஆயிரத்துக்குள்), இருப்பிடச் சான்று அல்லது குடும்ப அட்டை, தையல் பயிற்சி சான்று, கல்விச்சான்று அல்லது பிறப்புச் சான்று, சாதி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல், ஆதார் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வரும் 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை 0461 2325606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட சமூகநல அலுவலகத்தை 0461 2325606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in