

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 23-ம் தேதி, 5 மாத ஆண் குழந்தை நிமோனியா பாதிப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அதற்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதியானது. நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், நுரையீரலில் கடுமையான பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை கடந்த 27-ம் தேதி இரவு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.