திருச்சி- பெங்களூரு இடையே பகல்நேர துரித ரயில் சேவை : எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை

திருச்சி- பெங்களூரு இடையே பகல்நேர துரித ரயில் சேவை :  எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை
Updated on
1 min read

திருச்சி தொகுதி எம்.பி சு.திருநாவுக்கரசர் நேற்று டெல்லியில் ரயில்வே வாரியத் தலைவர் சுனீத் சர்மாவைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த மனு:

காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்று ஓராண்டுக்கு மேலாகியும், கேட் கீப்பர்களை நியமிப்பதிலுள்ள குளறுபடியால் ரயில் போக்குவரத்து தொடங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எம்.பி.க்கள் பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), கார்த்திக் சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ்கனி (ராமநாதபுரம்), செல்வராஜ் (நாகை) ஆகியோருடன் ஏற்கெனவே ரயில்வே அமைச்சர், வாரியத் தலைவரிடம் மனு அளித்துள்ளேன். இந்த விவகாரத்தில் ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இவ்வழித்தடத்தில் உடனடியாக ரயில் சேவையைத் தொடங்க வேண்டும்.

மேலும், திருச்சியில் இருந்து பெங்களூருக்கு பகல்நேர துரித ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும். திருச்சியில் இருந்து கீரனூர் வழியாக புதுக்கோட்டை வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் கீரனூரில் நின்று செல்ல அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in