Published : 01 Jul 2021 03:18 AM
Last Updated : 01 Jul 2021 03:18 AM

தி.மலை மாவட்டத்துக்கு 7 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வருகை :

திருவண்ணாமலை

திருவண்ணாலை மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் நேற்று பாதியில் முகாம்கள் நிறுத்தப்பட்டன. புதிதாக 7 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வரப்பெற்றதால் இன்று முகாம்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் நேற்று வரை ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 859 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண் டுள்ளனர். இதில், முதல் தவணையாக ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 410 பேரும், இரண்டாம் தவணையாக 24 ஆயிரத்து 449 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

மாநில அளவில் திருவண்ணா மலை மாவட்டத்தின் தடுப்பூசி செலுத்தும் செயல்பாடு 95 சதவீதமாக உள்ளது.

தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றம்

இதற்கிடையில், தி.மலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரம் தடுப்பூசி விநியோகம் குறைவாக இருப்பதால் நேற்று காலைக்கு பிறகு பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மாவட்டத்தில் நேற்று சுமார் 700 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி பற்றாக்குறையால் ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி முகாம்களும் நிறுத்தப் பட்டன. தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் இன்று (வியாழக் கிழமை) தடுப்பூசி முகாம் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘திருவண்ணா மலை சுகாதார மாவட்டத்துக்கு 4 ஆயிரமும், செய்யாறு சுகாதார மாவட்டத்துக்கு 3 ஆயிரம் என மொத்தம் 7 ஆயிரம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி வந்துள்ளது.

இன்று முகாம்கள் நடத்த ஏற்பாடு

கையிருப்பில் உள்ள தடுப் பூசிக்கு ஏற்ப நாளை (இன்று) முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x