

கல்வராயன்மலையில் சாராயம்காய்ச்சுவதற்காக மூலப்பொருட் கள் ஏற்றிச் சென்ற லாரி, மோதியதில் கோயில் குதிரை கவலைக் கிடமான நிலையில் உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சட்ட விரோத மாக சாராயம் காய்ச்சும் தொழில்நடைபெற்று வருகிறது. போலீஸா ரும் அவ்வப்போது சோதனை நடத்தி சாராய ஊரல்களை அழித்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலையில் சாராயம் காய்ச்சுவதற்கான வெல்லம் உள்ளிட்ட மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது வழியில் காளியம்மன் கோயிலுக்குச் சொந் தமான குதிரை சாலையை கடந் தது. அப்போது குதிரை மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த குதிரை மயங்கி விழுந்தது. இதைக்கண்ட சாராயம் காய்ச்சும் கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
கோயில் பூசாரி சடையன் குதிரை அடிபட்டு கிடப்பதைக் கண்டு, கரியாலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். ஆனால் போலீஸார் அதைப் பொருட்படுத்தவில்லை என்கின்றனர் வெள்ளிமலை கிராம மக்கள்.