Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் : கரோனாவால் மேலும் 6 பேர் உயிரிழப்பு :

கடலூர் மாவட்டத்தில் நேற்று 234 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 55,906 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 594 பேர் உட்பட 52,531 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 702 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 163 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 41,198 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 445 பேர் உட்பட 38,365 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,575 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 318 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 172 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 25,337 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x